மேஷம்:இந்த வாரம் சிறந்த வாரமாக அமையும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். உங்கள் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கைச் சற்று மன அழுத்தமாக இருக்கலாம். தைரியமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதன் மூலம் நீங்கள் அதிகாரம் பெறலாம். உங்கள் வேலையைக் கவனமுடன் செய்தால் வெற்றி நிச்சயம். வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். ஒரு வேலையைச் செய்கிறீர்கள் என்றால், உங்கள் சக ஊழியர்களின் ஆதரவினாலும் அன்பினாலும் வேலையில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரத்தில் முதலீடு செய்ய உகந்த நேரமிது. வங்கிக் கடனை அடைப்பதில் நீங்கள் வெற்றியைப் பெறலாம். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பதன் மூலம் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உடல்நலம் ஆரோக்கியத்துடன் இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.
ரிஷபம்: இது உங்களுக்கு ஒரு நல்ல வாரமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். காதலிப்பவர்களுக்கு தங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த வாரம் இருக்கும். வாரத் தொடக்கத்தில் நல்ல வருமானம் கிடைக்கும் இதனால் உங்கள் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் சவால்களைக் கண்டு பயப்படாமல், எதிர்கொள்வீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் நீங்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை பார்ப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் வேலையை முன்னெடுத்து வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் மாணவர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கலாம். படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வார நடுப்பகுதி பயணத்திற்கு ஏற்றது.
மிதுனம்:இந்த வாரம் சிறந்த வாரமாக அமையும். காதலிப்பவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். வாரத் தொடக்கத்தில், நன்மைகளைப் பெறுவீர்கள். சொத்துக்கள் வாங்க வாய்ப்புள்ளது. உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும். செலவுகள் குறையும். வியாபாரத்தின் மூலம் விரைவாக முன்னேறுவீர்கள். குடும்பத்தினர் மீது கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரம் வியாபாரிகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். கடினமாகப் படிக்க வேண்டும். இது நல்ல பலனைத் தரக்கூடும். உடல்நலம் நன்றாக இருக்கும், கவலைப்படத் தேவையில்லை. இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றது.
கடகம்: உங்களுக்கு பொதுவாக பலனளிக்கும் வாரமிது. காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையிடம் மனதில் உள்ளதைத் தயங்காமல் பேச வேண்டும். குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு சுமை அதிகமாக இருக்கலாம். செலவுகள் அதிகமாகும். மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். வாரக் கடைசி பணவரவு அதிகரிக்கும். நீங்கள் சமூக ஊடகங்களில் வேலை செய்பவராக இருந்தால், அதன் மூலம் நிறைய பயனடைவீர்கள். மக்களின் புகழுக்கு தகுதியானவர்களாக இருக்கலாம். வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் சில புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மன உறுதி அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.
சிம்மம்: உங்களுக்கு மிதமான பலனளிக்கும் வாரமிது. திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை சாதாரணமாக இருக்கும். இந்த வாரம் காதலிப்பவர்களுக்கு நல்ல வாரமாக அமையும். உங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்வீர்கள். மனதில் தோன்றுவதைச் செய்வீர்கள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கக்கூடும். அதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குறைவாக செலவு செய்வதன் மூலம் நிதி நிர்வாகத்தைக் கட்டுப்பாடுடன் வைத்திருப்பீர்கள். இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து புதிய வியாபாரத்தைத் தொடங்குவீர்கள். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வியாபாரிகள் தொழிலில் வெற்றி பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் வெற்றி பெற வாய்ப்புள்ளது. உடல்நலம் நன்றாக இருக்கும். வாரக் கடைசி நாட்கள் பயணத்திற்கு ஏற்றது.
கன்னி: இந்த வாரம் உங்களுக்கு சிறந்த வாரமாகும். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். எதிர்காலத்தில் நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். இனிவரும் காலங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுவீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். உங்கள் வேலையின் மீது முழு கவனத்தையும் செலுத்தினால், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை சீராக வைத்திருக்கலாம். இதனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் படிப்பில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த வாரம் முழுவதும் பயணத்திற்கு ஏற்றது.