அரியலூரில் உள்ள கிராமங்களில் தேர்தலின்போது வாக்குச்சாவடிக்கு முன்பு ஒவ்வொரு கட்சி முகவர்களும் தனியே கட்டிலில் அமர்ந்து கொண்டு, வாக்களித்துவிட்டு வருபவர்களுக்கு அவர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு வேட்பாளரும் வெற்றிலை பாக்கு, சுண்டல் வழங்கி அனுப்புவது வழக்கம்.
அதேபோல், இந்தத் தேர்தலிலும் தங்களது வழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் ஒவ்வொரு வேட்பாளர்களும் வாக்குச்சாவடிக்கு 200 மீட்டர் தூரத்தில் அமர்ந்து வாக்களித்து வந்த பொதுமக்களுக்கு வெற்றிலை பாக்கு, சுண்டல் ஆகியவற்றை வழங்கினர்.