தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குக்காக கொடுத்த பரிசுப்பொருட்கள் - மனம் உறுத்தி கோயிலில் ஒப்படைத்த நேர்மையாளர் - மன உளைச்சலில் வாக்காளர்

அரியலூர்: வாக்குக்காக கொடுத்த பரிசுப் பொருட்களால் மன உளைச்சல் ஏற்படுவதாகக் கூறி, வாக்காளர் ஒருவர்  பரிசுப்பொருட்களை கோயிலில் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

voters-prize-return
voters-prize-return

By

Published : Dec 26, 2019, 2:24 PM IST

அரியலூர் மாவட்டம் கீழக்கவட்டாங்குறிச்சி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவருக்கு எட்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காகத் தலைவர் பதவிக்கு நின்ற வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பல்வேறுப் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மேலக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்பவர் கீழக்காவட்டாங்குறிச்சியில் டெய்லர் கடை நடத்தி வருகிறார். நேற்று வீட்டிற்குச் சென்றபோது வேட்பாளர்கள் வாக்குக்காகப் பரிசுப்பொருட்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

மனம் உறுத்தி கோயிலில் பரிசுப்பொருட்களைத் தரும் நேர்மையாளர்

இதனையடுத்து வேட்பாளர்களால் கொடுக்கப்பட்ட பரிசு பொருட்களால் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்திக்க முடியாமல் இருப்பதாகவும், இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் கூறி பரிசுப்பொருட்களை கிராமத்தில் உள்ள கோயிலில் ஒப்படைத்தார். பச்சமுத்துவின் நேர்மை பல்வேறு தரப்பினரால் பாராட்டுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புப் பணியில் 63 ஆயிரம் காவல் துறையினர்!

ABOUT THE AUTHOR

...view details