அரியலூர் மாவட்டம் பருக்கல் கிராமத்தில் முறையாக வேலை வழங்க கோரியும், கடந்த எட்டு மாதங்களில் வேலை வழங்காத நிலையில் 120 கார்டில் 50 மேற்பட்ட கார்டுகளில் வேலை செய்ததாக கணக்கு காட்டி முறைகேடு நடந்ததாகவும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலை திட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்! - 100 நாள் வேலை புறக்கணிப்புப் போராட்டம்
அரியலூர்: சுத்தமல்லி அருகே பருக்கல் கிராமத்தில் 6ஆவது வார்டு மக்கள் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
100 நாள் வேலை திட்டத்தை புறக்கணித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
மேலும் அவ்வாறு முறைகேட்டில் ஈடுபட்டதால் தங்களுக்கு முறையாக பணி கிடைக்காதோ என்ற அச்சமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
கரோனா தொற்றின் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் தங்களுக்கு முறையாக வேலை கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.