அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் ஊராட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் தகுதியற்றவர்களுக்கு வேலை வழங்கியதாக அறிக்கை தயார் செய்து ஊழல் செய்வதாகவும் நீண்ட நாட்களாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்தும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், இறந்தவர்களின் பெயர்கள், ஒரு நபருக்கு இரண்டு அட்டை என தகுதியற்றவர்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கியதாக பொய்யான அறிக்கை தயார் செய்து ஊழல் செய்துவருகின்றனர்.