அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ள சாத்தம்பாடி கிராமத்தில் அரசு மதுபானக் கடை இல்லாததால் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகின்றது. இது தொடர்பாக பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவிசந்திரனிடம் பலமுறை கூறியும் அவர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அவரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டிய கிராம மக்கள்
அரியலூர்: சட்டவிரோதமாக நடைபெறும் மது விற்பனையை கண்டுகொள்ளாத ஊராட்சி மன்ற தலைவரை அலுவலகத்தில் வைத்து பூட்டி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
village people locked the panchayat president in office
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். பின்னர் அவரை காவல்துறையினர் மீட்டனர்.