தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! - Raid at food Supply Officer

அரியலூர்: செந்துறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 28 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Ariyalur Vigilance raid செந்துறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரெய்டு அரியலூர் செந்துறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரெய்டு Raid at food Supply Officer vigilance Raid at food Supply Officer in Ariyalur
vigilance Raid at food Supply Officer in Ariyalur

By

Published : Feb 1, 2020, 11:57 AM IST

Updated : Feb 1, 2020, 12:28 PM IST

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்ட வழங்கல் அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஓவ்வொரு மாதத்தின் கடைசி நாளன்று, நியாயவிலை கடைகளின் விற்பனையாளர்கள் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
வட்ட வழங்கல் அலுவலர், பொது விநியோக திட்ட அலுவலர் ஆகியோர் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், செந்துறை வட்டத்தில் உள்ள 63 நியாய விலைக் கடைகளின், 30 விற்பனையாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் போது, திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான காவல் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில், கணக்கில் வராத 28 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரெய்டு

மேலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, உரிய விளக்கம் அளிக்குமாறு 32 அலுவலர்களுக்கு லஞ்ச ஒழிப்பு துறை சம்மன் வழங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:

7 லட்சம் தீப்பெட்டி உற்பத்தியாளர்களின் வாழ்வில் விளக்கேற்றுமா மத்திய பட்ஜெட்?

Last Updated : Feb 1, 2020, 12:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details