தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடக்கழிவு மேலாண்மை சார்பில் கால்நடைகளுக்கு காய்கனிகள் வழங்கும் விழா! - கால்நடைகளுக்கு காய்கனிகள் வழங்கும் விழா

அரியலூர்: தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திடக்கழிவு மேலாண்மை சார்பில் பெறப்படும் காய்கனி கழிவுகளை கால்நடைகளுக்கு வழங்கும் விழா இன்று தொடங்கப்பட்டது.

vegetable-distribution-program-for-cattle
vegetable-distribution-program-for-cattle

By

Published : Mar 16, 2020, 12:29 PM IST

அரியலூர் நகராட்சியிலுள்ள பதினெட்டு வார்டுகளில், 93 தெருக்கள் அமைந்துள்ளன. அங்கு வசிக்கும் பொதுமக்களிடமிருந்தும், காய்கறி கடைகள், உணவகங்களிலிருந்தும் தினந்தோறும் சுமார் 13 மெட்ரிக் டன் மக்கும், மக்காத குப்பைகள் பெறப்படுகின்றன. இதில் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளும் பெருமளவு பெறப்பட்டுவருகின்றன.

திடக்கழிவு மேலாண்மை சார்பில் கால்நடைகளுக்கு காய்கனிகள் வழங்கும் விழா

இந்நிலையில், குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், காய்கனி கழிவுகளை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக நேரடியாக கால்நடைகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று தொடங்கபட்டது. குறிப்பாக அரசு கூட்டுறவு பால் பண்ணையில், பால் கறக்கும் மாடுகளுக்கு இந்தக் காய்கனி கழிவுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து காய்கனி கழிவுகளை கால்நடைகளுக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் புதிய பேட்டரி கார் அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details