நாடு முழுவதும் கரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவ மாணவர்களுக்கு செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வு நடக்கவுள்ளது. நீதிமன்றம் வரை சென்றும், நீட் தேர்வை நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமை உறுதியுடன் உள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: விசிக ஆர்ப்பாட்டம் - VCK Leader Thirumavalavan
அரியலூர்: நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
VCK Protest Against NEET in Ariyalur
இதன் ஒரு பகுதியாக, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் குறிப்பாக இந்த கோவிட்-19 நோய்த்தொற்று காலத்தில் மாணவர்களின் உயிருடன் மத்திய, மாநில அரசுகள் விளையாடுவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க:ஸ்டெர்லைட் ஆலை: வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை