தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிதம்பரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தார் திருமாவளவன்

அரியலூர்: நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனுத் தாக்கல் செய்த திருமாவளவன்

By

Published : Mar 25, 2019, 8:46 PM IST

தமிழ்நாடு முழுவதிலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியாளருமான விஜயலட்சுமியிடம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்த திருமாவளவன்

திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் போட்டியிடும் ரவிக்குமார், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். சிதம்பரத்தில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு, தேர்தல் ஆணையம் பானை சின்னம் வழங்கியதையடுத்து அவர் அச்சின்னத்தில் களமிறங்குகிறார்.

ABOUT THE AUTHOR

...view details