உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தாக்குதலிலும் தங்களது பணியை தொடர்ந்து மக்களுக்காக செய்துவரும் தூய்மைக் காவலர்களைப் பாராட்டி, அரியலூர் நகர வணிகர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் பெண் தூய்மைக் காவலர்களுக்கு சேலை, ஜாக்கெட் மற்றும் ஆண் தூய்மைக் காவலர்களுக்கு வேஷ்டி, கைலி, துண்டு ஆகியவை வழங்கப்பட்டது. முன்னதாக அவர்களது பணியைப் பாராட்டி, தூய்மைக் காவலர்கள் மீது பூத்தூவி மரியாதை செலுத்தினர்.