அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே ஓலையூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அருள் பாண்டியன். இவரின் தந்தை பெயரில் உள்ள சொத்தை தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக, கிராம நிர்வாக அலுவலகம் சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலரான சுமதி, அருள் பாண்டியனிடம் 1000 ருபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற விஏஓ கைது!
அரியலூர்: பட்டா மாற்றத்திற்கு மாற்றுத்திறனாளியிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட விஏஓ சுமதி
அதற்கு உடன்படாத அருள்பாண்டியன் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆலோசனையின்படி ரசாயனம் பூசப்பட்ட ஆயிரம் ரூபாய் பணத்தை அருள் பாண்டியன், சுமதியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு சென்ற போலீசார் விஏஓ சுமதியை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீசார் சுமதியிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்யது