தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

200 நாடுகளின் கொடிகளைப் பெயர்களுடன் கூறி யுகேஜி மாணவர் சாதனை! - அரியலூர் மாணவர் சாதனை

அரியலூர்: 200 நாடுகளின் கொடியை வைத்து அந்நாட்டின் பெயர், தலைநகரத்தை 5 நிமிடம் 19 வினாடிகளில் கூறி யுகேஜி மாணவன் சாதனைபடைத்துள்ளார்.

Jayamkondan ukg student get global award

By

Published : Oct 5, 2019, 10:14 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் சாய்கீர்த்தி என்ற மாணவர் யுகேஜி படித்து வருகிறார். அவர் படித்த பள்ளியில் 'குளோபல் புக் ரிசர்ச் பவுண்டேஷன்' சார்பில் சிறுவர்களுக்கான நுண்ணறிவு போட்டி நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட சாய்கீர்த்தி 5 நிமிடம் 19 வினாடிகளில் 200 நாடுகளின் தேசிய கொடியை பார்த்து அந்நாட்டின் பெயர், தலைநகரத்தை கூறி அசத்தியுள்ளார்.

இதன்மூலம் அவர், சில்ட்ரன் ரெக்கார்டு, நேஷனல் ரெக்கார்டு, ஆசிய-பசுபிக் ரெக்கார்டு, குளோபல் ரெக்கார்டு ஆகிய நான்கு பிரிவுகளில் சாதனைபடைத்துள்ளார்.

சாதனைபடைத்த சிறுவன் சாய்கீர்த்தி

இதன் பின்னர் சாய்கீர்த்திக்கு 'குளோபல் பவுண்டேஷன்' சார்பில் நான்கு பிரிவுகளில் சாதனைபடைத்தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும், இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பரிந்துரைக்கப்படவுள்ளதாக குளோபல் ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தச்சூழலில் சாதனைபடைத்த யுகேஜி மாணவன் சாய்கீர்த்திக்கு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 49 பேர் தேச துரோக வழக்கு - வைகோ கடும் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details