தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூரில் 12 வயது சிறுவன் உள்பட இருவருக்கு கரோனா தொற்று! - அரியலூர் மாவட்டச் செய்திகள்

அரியலூர்: கடந்த சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மருந்தக ஊழியருடன் தொடர்பில் இருந்த 12 வயது சிறுவன் உள்பட இருவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Two affected corana  அரியலூர் மாவட்டச் செய்திகள்  ariyalur district news
அரியலூரில் 12 வயது சிறுவன் உட்பட இருவருக்கு கரோனா தொற்று!

By

Published : Apr 23, 2020, 11:57 AM IST

அரியலூரிலிருந்து சமய மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர் நடத்திவரும் மருந்தகத்தில், பணிபுரியும் இரு ஊழியர்களுக்கு கரோனா தொற்று கடந்த சில நாள்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், பெண் ஊழியர் ஒருவரின் உறவினரான 12 வயது சிறுவன், கூலித்தொழிலாளி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

அதன்பின்பு, தொற்று உறுதியான இருவரும் திருச்சியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தனியார் மருத்துவமனை சிகிச்சை எனக்கு வேண்டாம் - பாதிக்கப்பட்ட மருத்துவர்

ABOUT THE AUTHOR

...view details