அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள புளியங்குழி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 30 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. அதில் ஒரு வீடு பாண்டியன் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு பாண்டியன், அவரது உறவினர் கருப்புசாமி, கண்ணதாசன் மூவரும் வீட்டிலிருந்த வேளையில் திடீரென வீடு இடிந்து விழுந்தது.
அதில் பலத்தக் காயமடைந்த பாண்டியன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். கருப்புசாமி படுகாயங்களுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். கண்ணதாசன் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்றுவருகிறார். இது குறித்து உடையார்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு