அரியலூர் மாவட்ட ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அஜய்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, ரயில்வே நிலையத்திற்கான இணைப்புச் சாலை பணிகள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள், பயணிகளின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அடிப்படை வசதிகள் விரைவில் செய்யப்படும் - ரயில்வே கோட்ட மேலாளர்! - Ariyalur Railway Station Inspection
அரியலூர்: ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து முடிக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.
Trichy Railway Station Manager Ariyalur Railway Station Inspection
இப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அதன்பின், அஜய்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த ரயில் நிலையம் தமிழ்நாட்டில் முக்கியமான ரயில்நிலையங்களில் ஒன்றாக உள்ளது என்றும் இதர அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் செய்து கொடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வீட்டுக்குள் நுழைந்த திருடன் - நையப்புடைத்து போலீஸிடம் ஒப்படைத்த மக்கள்