கோவிட்-19 காரணமாக, பேருந்து, ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, பேருந்து, சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் இயங்கும் என, தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் அதிவிரைவு வண்டி இன்று (செப்.7) காலை மீண்டும் இயங்கத் தொடங்கியது. அரியலூர் ரயில் நிலையம் வந்த இந்த ரயிலில் முன்பதிவு செய்த 79 பயணிகளில் 73 பயணிகள் புறப்பட்டுச் சென்றனர்.
மீண்டும் ரயில் சேவை தொடக்கம் - 73 பயணிகள் பல்லவன் விரைவு வண்டியில் பயணம்! - அரியலூர் ரயில் நிலையம்
அரியலூர்: ரயில் சேவை மீண்டும் தொங்கியுள்ள நிலையில், பல்லவன் விரைவு ரயில் அரியலூர் ரயில் நிலையம் வந்து சென்றது.
அரியலூர் வந்த பல்லவன் விரைவு வண்டி
முன்னதாக பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பிறகே, ரயில் நிலையத்தின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் முகக் கவசம் அணிந்தவர்களுக்கே ரயிலில் பயனிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த சிறு வியாபாரிகள்