அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் ’பாரம்பரிய நாட்டு விதைகளைக் காப்போம்’ என்ற தலைப்பில் இயற்கை விவசாயத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பல்வேறு இயற்கை ஆளுநர்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பாரம்பரிய விதைகளை காப்போம் காக்க நடைபெற்ற கருத்தரங்கம்! - seed fest
அரியலூர்: தமிழ்நாடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பாக பாரம்பரிய நாட்டு விதைகளை காப்போம் என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் மாப்பிள்ளை சம்பா, கிச்சடி சம்பா ,சீரகச் சம்பா, இலுப்பைப் பூ சம்பா ,கருப்புகவுனி, செவ்வக முனி கம்பு, தினை ,குதிரைவாலி ,சாமை, வரகு, கேழ்வரகு, எள், துவரை, காய்கறி, கீரை உள்ளிட்ட விதைகளும், இயற்கை முறையில் மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் விற்பனையும் நடைப்பெற்றது.
மேலும் இயற்கை விதை பொருட்களுக்கு வறட்சி காலங்களையும் , வெப்பமான காலங்களைலயும் தாங்கிக் கொள்ளும் குணம் உள்ளது என இயற்கை வல்லுநர்கள் கருத்தரங்கில் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிகள் விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் ஆர்வமாக கலந்து கொண்டு பல்வேறு விதைகளை வாங்கி சென்றனர்.