கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரின் கடைவீதியில் மூன்றுக்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், வணிகர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் பகுதியில் வேலை நேரத்தை குறைத்து வியாபாரம் செய்ய முடிவு - வியாபாரிகள் சங்கம் - அரியலுர் வியாபாரிகள் சங்கம்
அரியலூர்: ஜெயங்கொண்டம் வியாபாரிகள் சங்கம், வர்த்தகர் சங்கம் தாமாக முன்வந்து கடைகளின் வேலை நேரத்தை குறைத்து வியாபாரம் செய்ய வேண்டுமென முடிவு செய்துள்ளன.
Traders Association Decided to reduce working hours
இதனால், ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வர்த்தகர் சங்கம், வியாபாரிகள் சங்கம், இதர வணிகர்கள் சங்கம் தாமாக முன்வந்து கடை திறக்கும் நேரத்தை குறைத்துள்ளன. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே அனைத்துக் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.