தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - 9 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top ten news at 9 am  top ten news  top ten  top news  morning news  latest news  tamil nadu news  tamil nadu latest news  today news  news update  trending news  இன்றைய செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  அண்மை செய்திகள்  காலை செய்திகள்  9 மணி செய்திகள்  செய்திச் சுருக்கம்
செய்தி சுருக்கம்

By

Published : Nov 5, 2021, 9:08 AM IST

1. துவி பாத சிரசாசனத்தை 27 நிமிடங்கள் செய்த பள்ளி மாணவி சாதனை

திருவள்ளூரில் துவி பாத சிரசாசனம் என்னும் யோகாசனத்தை 27 நிமிடங்கள் செய்த கும்முடிபூண்டிச் சேர்ந்த பள்ளி மாணவி உலக சாதனை படைத்துள்ளார்.

2. 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரி - ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்

வேலூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய சதுப்பேரியில், தூர்வாராத காரணத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் நீர் புகுந்துள்ளது.

3. தமிழ் மன்னன் நரகாசுரனின் இறப்பைக் கொண்டாடக்கூடாது - கு.ராமகிருட்டிணன்

தமிழ் வம்சாவளியில் வந்த நரகாசுரனின் இறப்பினை கொண்டாடக்கூடாது எனவும்; வீரவணக்கம் செலுத்தும் நாளாக கருத வேண்டும் எனவும் தந்தை பெரியார் திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.

4. Drunk and Drive - சென்னையில் 3 மாதங்களில் 11,077 வழக்குகள் பதிவு

சென்னையில் கடந்த 3 மாதங்களில் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக சுமார் 11 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

5. மயிலாடுதுறையில் ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக்கொலை

மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக ஜேசிபி ஆப்ரேட்டரை ஓட ஓட விரட்டிச் சென்று கத்தியால் குத்தி கொலை செய்த அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

6. ரூ. 4 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்

மும்பையில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 700 கிராம் ஹெராயினை பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரை கைது செய்துள்ளனர்.

7. நான்காவது நாளாக மகாபாதயாத்திரை - விவசாயிகள், பெண்கள் பங்கேற்பு

ஆந்திராவின் ஒரே தலைநகராக அமராவதியை தக்கவைக்கக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் 'மகாபாதயாத்திரை' நான்காவது நாளை எட்டியுள்ளது.

8. பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்த கர்நாடகா - எவ்வளவு குறைத்தது தெரியுமா?

பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

9. ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்த நயன்தாரா

நடிகை நயன்தாரா ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10. திரையில் கண்ட அனைத்து உணர்ச்சிகளும் நிஜம்; நடிப்பு அல்ல! - நடிகர் கார்த்தி

நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படத்தைப் பாராட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details