தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM - செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

top ten news at 9 am  top ten  top news  top ten news  latest news  tamil nadu news  tamil nadu latest news  today news  morning news  news update  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  காலை செய்திகள்  9 மணி செய்திகள்  செய்தி சுருக்கம்  அண்மை செய்திகள்
செய்தி சுருக்கம்

By

Published : Oct 28, 2021, 9:06 AM IST

1. பெட்ரோல் விலை ஏற்றத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாய் 13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

2. வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - இடிந்து விழுந்த தடுப்பணை கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம் அருகே கடந்தாண்டு கட்டப்பட்ட தளவானூர் தடுப்பணை இடிந்து விழுந்த நிலையில் தற்போது தண்ணீர் வெளியேறி கடலில் கலப்பதால் விரைவில் தடுப்பணையை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3. வடகிழக்கு பருவமழை - கூடுதல் தலைமைச் செயலாளர் நேரில் ஆய்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் கூடுதல் தலைமை செயலாளர் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்தனர்

4. பாஜக கொடி கம்பம் வைக்க அனுமதி கோரி மனு - தேனி ஆட்சியர் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொடி கம்பம் வைக்க அனுமதிக்கக் கோரிய மனுவை தேனி மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

5. சார்மினார் எக்ஸ்பிரஸ்சில் 18 கிலோ கஞ்சா பறிமுதல் - ரயில்வே காவல்துறை தீவிர விசாரணை

ஹைதராபாத்தில் இருந்து தாம்பரம் வந்த ரயிலில், 18 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காவல்துறை பெட்டியில் பயணம் செய்த 72 பேரையும் விசாரணை மேற்கொள்ள முடிவுசெய்துள்ளது.

6. இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-5 சோதனை வெற்றி

ஐந்தாயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணை, வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

7. கரோனா தடுப்பூசிக்கு எதிரான பதிவுகள் - பதிவு செய்ய பேஸ்புக் தடை!

மக்களிடத்தில் குழப்பம் ஏற்படுத்தும் விதமாக, கரோனா தடுப்பூசிக்கு எதிரான பதிவுகள் சமூக வலைதளங்களில் உலாவி வந்தது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசிக்கு எதிரான பதிவுகளை கண்காணித்து அகற்றிட பேஸ்புக் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

8. புனித யாத்திரை, ஃபாரின் டூர்... - மன அழுத்தத்தைப் போக்க பயணம் மேற்கொள்ளும் சமந்தா!

திருமண வாழ்விலிருந்து வெளியேறிய சமந்தா தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். முன்னதாக நான்கு புனித ஸ்தலங்களுக்கு பயணித்ததைத் தொடர்ந்து, தற்போது வெளிநாட்டு சுற்றுலா சென்றுள்ளார்.

9. மாநகரம் ஸ்ரீக்கு இன்று பிறந்தநாள்

நடிகர் ஸ்ரீ தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10. ஸ்காட்லாந்தை வீழ்த்தி நமிபியா அசத்தல் வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் ஸ்காட்லாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமிபியா வெற்றிபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details