தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top ten  top news  top ten news  latest news  tamil nadu latest news  tamil nadu news  news today  morning news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  காலை செய்திகள்  7 மணி செய்திகள்  செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்

By

Published : Nov 1, 2021, 6:59 AM IST

1. 'நகரும் புகைப்படக் கண்காட்சி' : திறந்து வைக்கும் மு.க.ஸ்டாலின்!

'விடுதலைப் போரில் தமிழகம் ' என்ற புகைப்படக் கண்காட்சி மற்றும் கப்பலோட்டிய தமிழன் வஉசியின் வாழ்க்கை வரலாறு குறித்து அரசுப் பேருந்தில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.

2. தீபாவளி ஸ்பெஷல் 'அண்ணாத்த சேலைகள்' - விற்பனை ஜோர்!

தீபாவளி பண்டிகைக்கு புதிய ரகமாக 'அண்ணாத்த சேலைகள்' அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

3. கரோனா கட்டுப்பாடுகள் எங்கே - கும்பலாக தீபாவளி பொருள்கள் வாங்க குவிந்த மக்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் கரோனா கட்டுப்பாடுகளை மறந்து, பொருள்கள் வாங்க குவிந்துள்ளனர்.

4. 1009 பேருக்கு கரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1009 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

5. கடலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக கனமழை பெய்து வருவதால் கடலூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

6. தமிழ்நாடு இழந்த தமிழர் பகுதிகளை மீட்டெடுக்க வேண்டும் - ராமதாஸ்

அண்டை மாநிலங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கு தேவையான அரசியல், சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

7. சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ரஜினிகாந்த்!

ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை செய்து காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

8. ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி: பெண் நிர்வாகியை சந்தித்த விஜய்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவருக்கு, நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

9. 'அண்ணாத்த' ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

தீபாவளியையொட்டி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள 'அண்ணாத்த' திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு ஆன்லைனில் இன்று தொடங்கியது.

10. T20 WORLDCUP: நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி

டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியிடம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா ஏறத்தாழ இழந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details