தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் -  3 பேர் கைது! - காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்

அரியலூர் : ஆள் மாறாட்டம் செய்து காவலர் தேர்வு எழுதிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்

By

Published : Aug 25, 2019, 4:01 PM IST

Updated : Aug 26, 2019, 9:39 AM IST

அரியலூர் மாவட்டம் தத்தனூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு அரசு நடத்தும் காவலர் தேர்வு நடைபெற்றது . அதில் தேர்வாணையர் கண்காணிப்பில் ஈடுப்பட்டபோது தேர்வறையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவபிரகாஷ் என்பவருக்கு பதிலாக ரகுபதி என்பவர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.

காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம்

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்வு எழுதிய ரகுபதி, எழுத சொன்ன தேவபிரகாஷ் மற்றும் அவரின் அண்ணன் சந்தோஷ் ஆகியோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத ரகுபதி ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு எழுதியது தெரியவந்துள்ளது.

Last Updated : Aug 26, 2019, 9:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details