தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மளிகைக் கடையில் திருட்டு! கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு - Theft in grocer store

அரியலுார்: ஜெயங்கொண்டம் அருகே மளிகைக் கடையின் பூட்டை உடைத்து, ரூ.75 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத கும்பல் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

jeyamkondam

By

Published : May 27, 2019, 3:15 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் சாய் மளிகைக் கடை நடத்திவருபவர் கேசவன். இவர் பொவோன்ட்டோ (bovonto) டீலர்ஷிப் எடுக்க தன்னுடைய கடையில் 75 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று கடையை வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார் கடையின் உரிமையாளர். இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத கும்பல் இரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து ரூ. 75ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

மளிகை கடையில் திருட்டு

இதையடுத்து காலை வழக்கம்போல் கடையை திறக்கவந்த கேசவன் கடையின் பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உள்ளே சென்று பார்த்தார். அப்போது கடையில் வைத்திருந்த பணம் திருடு போயிருப்பதை அறிந்த அவர் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள கடைகளை குறிவைத்து தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றுவருகின்றது.

ABOUT THE AUTHOR

...view details