நாடு முழுவதும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி அரியலூர் அண்ணாசிலை அருகில் இருந்து தொடங்கியது.
இந்த பேரணியை தமிழ்நாடு அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியர் ரத்னா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அப்போது அவ்வழியாக சாலையில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தினை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு uஜேந்திரன் ரோஜாப்பூ கொடுத்து இனிமேல் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுரை கூறினார்.
சாலை பாதுகாப்பு வார விழா பேரணி இந்த பேரணியில் சென்றவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்
இதையும் படிங்க :30 லட்சம் விதைப்பந்துகள் உருவாக்கும் சாதனை முயற்சியில் இறங்கிய பள்ளி மாணவர்கள்!