தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

💰மின் கட்டணம் செலுத்த அவகாசம்?💡

தமிழ்நாட்டில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிப்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

time request to pay Electricity bills  Electricity bills  Electricity billing time  senthil balaji  மின் கட்டணம் அவகாசம்  மின் கட்டணம் செலுத்த அவகாசம்  மின் கட்டணம்  செந்தில் பாலாஜி
மின் கட்டணம்

By

Published : Nov 11, 2021, 12:33 PM IST

தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது. “தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது மின்தட்டுப்பாடு விவரங்கள் குறித்தும், மின் வாரிய பயன்கள் குறித்தும் தொடர்ந்து கேட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழைப்பொழிவு அதிகம் இருந்தாலும் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக மின் தடை ஏற்படாது. தண்ணீர் தேங்கினால் மட்டுமே மின் தடை செய்யப்படும்.

ஓ.பன்னீர்செல்வம் மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அது அவரின் கருத்து. ஆனால், மக்கள் யாரும் இதுகுறித்து கருத்துக்களை முன்வைக்கவில்லை. இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சரிடம் இது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும். தற்பொழுது வரை மின் உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் இல்லை. நிலக்கரி போதுமான அளவு உள்ளது” என்றார்.

இதையும் படிங்க: நான்கு நாள்களுக்கு டாஸ்மார்க் மூடல்

ABOUT THE AUTHOR

...view details