தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த அரசுப் பேருந்து! - அரியலூர் மாவட்டச செய்திகள்

அரியலூர்: திருமழபாடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து, நள்ளிரவு நேரத்தில் திடீரென தீப்பற்றி எரிந்து முற்றிலும் நாசமானது.

திருமழபாடி பேருந்து எரிந்து விபத்து  அரியலூர் மாவட்டச செய்திகள்  thirumalapadi govt bus fire accident
நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

By

Published : Dec 24, 2019, 12:59 PM IST

லால்குடியில் இருந்து திருமழபாடிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து கடைசி நடையாக திருமழபாடிக்கு இரவு 10.30 மணிக்கு மேல் வந்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு அதிகாலையில் 6.30 மணிக்கு மீண்டும் இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்றிரவு ஓட்டுநர் செந்தில் குமார் மற்றும் நடத்துநர் கிருஷ்ணகுமார் ஆகியோர் பேருந்தை திருமழபாடி கால்நடை மருத்துவமனை அருகே நிறுத்திவிட்டு கால்நடை மருத்துவமனையில் படுத்து உறங்கியுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் பேருந்து திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

இதுகுறித்து தகவலறிந்த அரியலூர் தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும், அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து, திருமானூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சரை அருகில் வைத்தே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகப் பேசிய கருணாஸ்

ABOUT THE AUTHOR

...view details