தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரப்போகுது புரட்டாசி மாதம்: கறிக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்! - The Upcoming Poratashi

அரியலூர்: புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளதால் மீன், கறிக்கடைகளில் அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

கறிக்கடை

By

Published : Sep 15, 2019, 5:19 PM IST

புரட்டாசி மாதம் வரும் புதன்கிழமை தொடங்க உள்ளது. இந்த மாதம் வைணவக் கடவுளான பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பலர் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளையே விரும்பி உண்ணுவர். மேலும் இந்த மாதத்தில் பலர் விரதம் இருப்பதாலும் அசைவ உணவுகள் தவிர்ப்பது வழக்கம். இந்நிலையில் இன்று ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அசைவ பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களுக்குத் தேவையான அசைவ உணவுப்பொருட்களை வாங்கிச் சென்றனர். குறிப்பாக கறிக்கடை, மீன்மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது.

கறி மற்றும் மீன்கடைகளில் அலைமோதிய மக்களின் கூட்டம்

மேலும் காய்கறிக்கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்பட்டதால், வியாபாரிகள் கலக்கமடைந்தனர். கூட்டம் அதிகரிப்பு காரணமாக மீன் வகைகளில் சிலவற்றின் விலை சற்று அதிகமாக விற்கப்பட்டது. குறிப்பாக ஆட்டுக்கறி கிலோ ரூ.650க்கும்,கோழிக்கறி ரூ.130க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details