கரோனோ தடுப்பு நடவடிக்கை காரணமாக 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதையடுத்து சாலையில் சுற்றித்திரியும் நபர்களைப் பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வந்தனர். இன்றுவரை ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரண்டு மணி நேரத்தில் 500 வாகனங்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி - அரியலூர் : இரண்டு மணி நேரத்தில் 500 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை
அரியலூர்: இரண்டு மணி நேரத்தில் 500 வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அரியலூரில் 2 மணி நேரத்தில் 500 வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்
இன்று காலை ஆறு மணி முதல் ஒரு மணி வரைதான் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அரியலூர் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் 55 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை அந்தந்த பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.