தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மானை ருசி பார்க்க முயன்ற நாய்கள் - பத்திரமாக மீட்ட மக்கள்! - காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மான்

அரியலூர்: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மான் ஆனது கருவேல மரங்களில் சிக்கிக் கொண்டதைப் பார்த்த நாய்கள், அதனைக் கடித்துக் குதறின. அதனைக் கண்ட பொதுமக்கள் மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய மான்
வெள்ளத்தில் சிக்கிய மான்

By

Published : Jul 12, 2020, 1:11 PM IST

அரியலூர் மாவட்டம், செந்துறைப் பகுதியில் நேற்று(ஜூலை 11) மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கிராமப்பகுதிகளில் உள்ள காட்டு ஓடைகளில், மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்நிலையில் இலங்கைச்சேரி கிராமத்தில் உள்ள காட்டு ஓடையில் பதுங்கி இருந்த மான் குட்டி ஒன்றை, வெள்ளம் இழுத்து வந்தது.

பின் அந்த மான் ஆனது, கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள கருவேல மரங்களில் சிக்கிக் கொண்டது. அப்போது அங்கிருந்த நாய்கள் அந்த மானைக் கடித்துக் குதறின.

இதனைக் கண்ட கிராம மக்கள் அந்த மானை நாய்களிடமிருந்து மீட்டனர். அதன் பின்னர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்லம் கடம்பன், செந்துறை காவல் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அத்தகவல் அறிந்து இலங்கைச்சேரி கிராமத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த மானை மீட்டு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க:வனவிலங்கு கடத்தல் காரணமாக பேரபாயத்தை எதிர்நோக்கியுள்ள மனிதகுலம்!

ABOUT THE AUTHOR

...view details