காவிரி - கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட உள்ள இடத்தை தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா ராஜேந்திரன், நீர்வள பாதுகாப்பு மற்றும் நதிகள் சீரமைப்பு கழக இயக்குநர் சத்யகோபால், மாவட்ட ஆட்சியர் ரத்னா ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது தடுப்பணை கட்டப்பட உள்ள இடம். பாசன பரப்பு உள்ளிட்ட விவரங்களை பொதுப்பணித்துறை அலுவலர்கள் அரசு தலைமை கொறடா ராஜேந்திரனிடம் தெரிவித்தனர்
'கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையால் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன வசதி' - அரசு தலைமை கொறடா தகவல் - Blocking of Ariyalur kollidam River
அரியலூர்: கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டுவதன் மூலம் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறும் என அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
!['கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணையால் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன வசதி' - அரசு தலைமை கொறடா தகவல்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5005688-thumbnail-3x2-ari.jpg)
பின்னர் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, 'விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. தடுப்பணை கட்டப்பட்டால் கடலில் வீணாகும் தண்ணீர் சேமிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் பெருகும். மேலும் அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களுக்கிடையே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன வசதி பெறும்' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தடுப்பணையில் நிரம்பி வழியும் உபரி நீர் - பார்ப்பதற்கு ஆர்வம் காட்டும் மக்கள்!