அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூரில் அரசு உதவி பெறும் புனித பிலோமினா மேல்நிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளி வாகனம் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றபோது முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றதில் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் நிலை தடுமாறி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 குழந்தைகள் காயமடைந்தனர்.
தனியார் பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து இதையடுத்து அவர்கள் அரியலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இது குறித்து தகவலறிந்து வந்த செந்துறை காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: இளைஞர் உயிரிழப்பு - தென்பெண்னை ஆற்று பாலத்தில் சாலை மறியல்