அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். பட்டதாரி ஆசிரியரான இவர் திராவிடநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஆண்டிமடம் கடைவீதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துள்ளார். அப்போது 500 ரூபாய் நோட்டுகளாக 9 ஆயிரம் ரூபாய் பணம் வந்துள்ளது.
ஏடிஎம் மெஷினில் தவறுதலாக வந்த பணம்: காவல் துறையிடம் ஒப்படைத்த ஆசிரியர் - Ariyalur district
அரியலூர்: ஆண்டிமடம் அருகே ஏடிஎம் இயந்திரத்திலிருந்து கிடைத்த தனக்குச் சொந்தமில்லாத பணத்தை ஆசிரியர் ஒருவர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.
இதனைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் செல்போனில் தனது கணக்கைச் சரிபார்த்துள்ளார். ஆனால் அவரது கணக்கில் பணம் எதுவும் குறையவில்லை. பின்னர் மீண்டும் கார்டை சொருகி முதலில் ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளார். மீண்டும் கணக்கைச் சரிபார்த்துள்ளார்.
அப்போது அவரது கணக்கிலிருந்து ஆயிரம் மட்டும் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தனக்குச் சொந்தமில்லாத பணத்திற்கு ஆசைப்படாத ஆசிரியர் ஆண்டிமடம் காவல் நிலையத்திற்குச் சென்று 9 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்தார். ஆசிரியரின் இச்செயலைப் பலரும் பாராட்டிவருகின்றனர்.