தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் போக்சோவில் கைது - Ariyalur Teacher arrested

அரியலூரில் 10ஆம் வகுப்பு மாணவனை காதலித்த பெண் ஆசிரியரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்தனர்.

teacher-arrested-in-pocso-act-in-ariyalur
teacher-arrested-in-pocso-act-in-ariyalur

By

Published : Dec 28, 2021, 12:08 PM IST

Updated : Dec 28, 2021, 12:16 PM IST

அரியலூர் : கடந்த சில மாதங்களாக மாணவிகளிடம் தகாத முறையில் நடந்த ஆசிரியர்கள் சிலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில், அரியலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை அப்பள்ளியின் பெண் ஆசிரியர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகாரளித்தார். அதன் அடிப்படையில் பெண் ஆசிரியரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவர் மாணவனை காதலித்தது உண்மை என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவனை காதலித்த பெண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்படட சம்பவம் அரியலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : மதுவால் நேர்ந்த விபரீதம் - தற்கொலை செய்துகொண்ட மனைவி

Last Updated : Dec 28, 2021, 12:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details