தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டாஸ்மாக் கடையால் கடும் அவதி! - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு! - சிறுகளத்துார்

அரியலுார்: ஊருக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி சிறுகளத்தூர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

TASMAC shop

By

Published : May 27, 2019, 4:07 PM IST

Updated : May 27, 2019, 4:17 PM IST

அரியலுார் மாவட்டம்சிறுகளத்தூர் ஊராட்சியில் வயல்வெளியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. பெரிய குறிச்சியில் இருந்து பொன்பரப்பியில் மேல்நிலை படிப்புக்காக வரும் மாணவ மாணவிகள் டாஸ்மாக் கடை வழியாகவே வரவேண்டியுள்ளது. டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு ஆங்காங்கே அலங்கோலமாக படுத்துக் கிடப்பதாலும், கெட்ட வார்த்தையில் பேசுவதாலும் அவ்வழியாகச் செல்லும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வரவே அச்சப்படுகின்றனர்.

டாஸ்மாக் கடையால் கடும் அவதி

மேலும், டியூஷன் முடிந்து இரவில் குழந்தைகள் வர முடியவில்லை. கூலி வேலைக்கு செல்லும் பொது மக்களும் மிகுந்த சிரமப்பட வேண்டி உள்ளது. ஏற்கனவே கடையை அகற்ற அகிம்சை முறையில் பல போராட்டங்கள் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அம்மக்கள் குற்றம்சாட்டினர். அவர்கள் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்து டாஸ்மாக் மேலாளருடன் பேசி முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

Last Updated : May 27, 2019, 4:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details