கரோனா வைரஸ் தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில் அரியலூர் மாவட்டத்தில் பூட்டியிருந்த முன்று மதுபானக் கடைகளிலிருந்து, சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் திருடப்பட்டன.
9 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் மண்டபத்தில் வைப்பு - மதுபானங்கள்
அரியலூா் மாவட்டம் முழுவதும் உள்ள 53 டாஸ்மாக் கடைகளிலிருந்த ரூ.9 கோடி மதிப்பிலான மதுபானங்கள், தனியாா் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
![9 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் மண்டபத்தில் வைப்பு மதுபானங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6694766-1007-6694766-1586242582388.jpg)
மதுபானங்கள்
அதனால் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 53 டாஸ்மாக் கடைகளில் இருந்த ரூ.9 கோடி மதிப்பிலான மதுபானங்கள் அனைத்தும், லாரிகள் மூலம் கொண்டுவரப்பட்டு கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, திருமண மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க:மது கிடைக்காத விரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!