அரியலூர் மாவட்டம் செந்துறையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்திருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு, மாணவர்களின் இடைநிற்றலை அதிகப்படுத்தும். இத்தேர்வானது குலக்கல்விக்கு வழிவகுப்பதாக உள்ளது. தமிழ்நாடு அரசு இதனை ரத்து செய்யவேண்டும்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளவேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து முழுமையாக நாட்டுடைமையாக்க வேண்டும். இதுபோன்ற தவறுகள் நடைபெறமால் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.