அரியலூர்:அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு திறன் அடிப்படையில் பல்வேறு பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் (Maha Family Salon and Spa International Training Academy) மூலமாக புகழ் பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும், அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology & Hair Dressing) சுய தொழில் செய்யவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரையுள்ள மாணக்கர்கள் விண்ணப்பிக்கலாம். 45 நாட்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும், இப்பயிற்சிக்கான அனைத்து செலவையும் தாட்கோ ஏற்கும்.