அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18ஆம் தேதி தேர்தல் தொடர்பாக 2 பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினரின் வீடுகள் அடித்து உடைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அப்பகுதி பதட்டத்துடன் காணப்பட்டது.
பொன்பரப்பியில் சிசிடிவி படக்கருவி மூலம் கண்காணிப்பு! - சிசிடிவி படக்கருவி
அரியலூர்: பொன்பரப்பி கிராமத்தில் இரண்டு இடங்களில் சிசிடிவி கேமரா அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பொன்பரப்பியில் சிசிடிவி படக்கருவி மூலம் கண்காணிப்பு!
அதனைத் தொடர்ந்து பிரச்னைக்கு உரிய பகுதிகளில் கண்காணிப்பு படக்கருவிகள் நிறுவ முடிவெடுத்து, இரண்டு இடங்களில் நான்கு கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்தப்பட்டது. அதனை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் திறந்து வைத்தார். மேலும், படக்கருவிகள் மூலம் கண்காணிக்கப்படுவதால் மக்கள் எவ்வித அச்சமின்றி இருக்கலாம் என்று தெரிவித்தார்.