அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியனை,
விருதுநகரில் பணி ஓய்வுபெறும் நாளன்று, தற்காலிக பணியிடை நீக்கம் செய்த அம்மாவட்ட ஆட்சியர் சிவஞானம் உத்தவிட்டார்.
'சுப்பிரமணியின் இடைநீக்கத்தை திரும்பப்பெறு... இல்லையேல்!' அரசு ஊழியர்கள் எச்சரிக்கை - tamil nadu government employees association
அரியலூர்: அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பணி இடைநீக்கம் செய்ததை கண்டித்து, அரியலூா் பேருந்து நிலையம் அருகே அச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

protest
இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது என்றும், அவரது பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி,
250-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்அரியலூர் பேருந்து நிலையம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அவருடைய தற்காலிக பணி இடைநீக்கத்தை ரத்து செய்யாவிட்டால், வருகிற ஜூன் 12ஆம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தை சென்னையில் நடத்துவோம் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் எச்சரித்தனர்.