அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2018-19ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஓராண்டு காலமாகியும் மடிக்கணினி வழங்கப்படாமலேயே இருந்தது.
மடிக்கணினி வழங்காததால் வகுப்பறையை பூட்டிய முன்னாள் மாணவர்கள்! - முன்னாள் மாணவர்கள்
அரியலூர்: 2018-19ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் தற்போது 11,12ஆம் வகுப்பு படித்துவருபவர்களுக்கு வழங்குவதாக கிடைத்த தகவலையடுத்து வகுப்பறையை பூட்டி முன்னாள் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போராட்டம்
இந்நிலையில், அந்தப் பள்ளியில் தற்போது 11,12ஆம் வகுப்பு படித்துவரும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக கிடைத்த தகவலையடுத்து முன்னாள் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் மடிக்கணினி வைத்துள்ள அறையைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு அனைத்து மாணவர்களுக்கும் பாகுபாடின்றி மடிக்கணினி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.