தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீட் தேர்வு முடிவில் குளறுபடி: ஓஎம்ஆர் ஷீட் மாற்றப்பட்டதா? - நீட் தேர்வு முடிவில் குளறுபடி

அரியலூர்: நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடியான தகவல் வெளியாகி பின்னர் திருத்தப்பட்ட நிலையில், தன்னுடைய ஓஎம்ஆர் ஷீட்டை மாற்றியுள்ளதாக மாணவி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாணவி மஞ்சு
மாணவி மஞ்சு

By

Published : Oct 17, 2020, 4:49 PM IST

அரியலூர் மாவட்டம் சாத்தனூர் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாராணியின் மகள் மஞ்சு. இவர் நீட் தேர்வை எழுதுவதற்காக தனியார் கல்லூரியில் பணியாற்றிய அவரது தாயார் வேலையை விட்டுவிட்டு, நாள்தோறும் 20கி.மீ. தொலைவுள்ள பள்ளிக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார். மாணவி மஞ்சு தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று தேர்வின் முடிவில் 299 மதிப்பெண் பெற்றார்.

நாகப்பட்டினம் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பில்லியன் பள்ளியில் மஞ்சு நீட் தேர்வை எழுதினார். இத்தேர்வில் மூன்று கேள்விகளுக்கு மட்டுமே விடைக் குறிப்பிடாமல் விட்ட மஞ்சு தனக்கு 680 மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே மஞ்சுவிற்கு கிடைத்துள்ளது. சுமாராக 680 மதிப்பெண்கள் எதிர்பார்த்த மஞ்சுவிற்கு சொற்ப மதிப்பெண்கள் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி மஞ்சுவின் பேட்டி

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்விற்காக கடுமையாக உழைத்ததாகக் கூறும் மஞ்சு, தன்னுடைய ஓஎம்ஆர் ஷீட்டை மாற்றியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். தற்போது அசல் ஓஎம்ஆர் ஷீட் வேண்டும் எனக் கோரியுள்ளார். கிராமத்தில் உள்ள மாணவர்கள் மருத்துவம் பயிலக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க:நீட் தேர்வு முடிவுகள்: குளறுபடி திருத்தம், புது பட்டியல் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details