இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், கழகத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவருமான சிவசுப்பிரமணியன் திடீரென்று இயற்கை எய்தினார் என பேரிடியாக வந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த திமுக முன்னாள் எம்.பி-க்கு ஸ்டாலின் இரங்கல்! - ariyalur
அரியலுார்: திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் எஸ்.சிவசுப்பிரமணியன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த திமுக முன்னாள் எம்.பி.க்கு ஸ்டாலின் இரங்கல்!
என் மீது நீங்காப் பற்று வைத்திருந்த அவரை இன்றைய தினம் நான் இழந்து தவிக்கிறேன். திராவிட இயக்கத்தின் கொள்கைக் குன்றமாக, உறுதிமிக்க லட்சிய வீரராகத் திகழ்ந்து, கழகத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த சிவசுப்பிரமணியனின் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.