தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாற்று நட்டு போராட்டம் - சாலையை சீரமைக்க வலியுறுத்தல் - ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே அறங்கோட்டை கிராமத்தில் சேறும் சகதியுமான சாலையில் கிராம மக்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாற்று நட்டு போராட்டம்
நாற்று நட்டு போராட்டம்

By

Published : Nov 10, 2021, 12:39 PM IST

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே அறங்கோட்டை கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை.

தொடர் கனமழையால் தார் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி சேறும் சகதியுமான சாலையில் அப்பகுதியினர் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 835 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details