தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின் பணிவேடுகளாக மாற்றப்படும் பணி பதிவேடுகள்! - அரியலூரில் சிறப்புக் கூட்டம்

அரியலூர்: ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் முழுமையாக மின் பணிவேடுகளாக மாற்றப்படுவதால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் பணப்பயன்கள் அனைத்தையும் பெற முடியும்.

jawahar

By

Published : Nov 8, 2019, 9:52 AM IST

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் செயலாக்க ஆலோசனைக்கூட்டம் கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் ஜவஹர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஜவஹர், "இந்தியாவிலேயே முதன் முறையாக மாநிலத்தின் நிதி மேலாண்மை, மனிதவள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டாக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசின் நிதி நிர்வாகம், வரவு, செலவு குறித்த விவரங்களை இணையத்தின் மூலம் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் ஜவஹர்

இதில், ஒன்பது லட்சம் அரசுப் பணியாளர்களும் எட்டு லட்சம் ஓய்வூதியர்களும் பயனடையும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசு ஊழியர்களின் பணி பதிவேடுகள் மின் பணிவேடுகளாக மாற்றப்படும்போது அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் அன்றே அவர்களுக்கான பணப் பயன்கள் அனைத்தும் கிடைத்துவிடும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்!

ABOUT THE AUTHOR

...view details