அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசன். இவர் 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் விசாரணை அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி! - உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி
அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டு இழப்பீடு தொகை வழங்காத காரணத்தால் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
![உயிரிழந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு தொகை வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி! State bus japti, which does not pay compensation to the family of the deceased](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6271571-thumbnail-3x2-ha.jpg)
State bus japti, which does not pay compensation to the family of the deceased
அரசுப் பேருந்து ஜப்தி
இறந்த எழிலரசனின் குடும்பத்துக்கு விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் 11 லட்சத்து 39 ஆயிரத்து 86 ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் தொகை வழங்காத காரணத்தால், அரசுப் பேருந்து ஜப்தி செய்வதற்காக அரியலூர் நீதிமன்ற வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் அப்பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
இதையும் படிங்க:திருச்சியில் பொதுமக்களை அச்சுறுத்திய 10 அடி நீளமுள்ள முதலை - 3 மணி நேரமாக பிடிக்க போராடிய வனத்துறை!