தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார்மயமாகும் ரயில்வே துறை : சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்! - சதன் ரயில்வே அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் : ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்து சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தனியார் மயமாகும் ரயில்வே துறை: சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் ஆர்ப்பாட்டம்!
Ariyalur railway union officers protest against central government

By

Published : Aug 11, 2020, 11:43 AM IST

அரியலூர் மாவட்டம், ரயில் நிலையத்தில் உள்ள பகுதி பொறியாளர் அலுவலகம் முன்பு சதன் ரயில்வே மஸ்தூர் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி தொகை, ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி தொகை ஆகியவற்றையும் சேர்த்து நிலுவையில் உள்ள பதினெட்டு மாதத் தொகையை மொத்தமாக வழங்க வேண்டும்.

பயணிகள், சரக்கு ரயில் ஆகியவற்றை தனியாருக்கு விற்கக் கூடாது. பணிமனைகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது” உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கை அட்டைகளை ஏந்தியவாறு, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக்கவசங்கள் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details