தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்டா மாறுதலுக்கு தீர்வு - இனி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்: விவரங்கள் இதோ..!

இனி சுலபமான வழியில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் யோசனைகளை அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி வழங்கியுள்ளார்.

பட்டா மாறுதலுக்கு தீர்வு- இனி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்
பட்டா மாறுதலுக்கு தீர்வு- இனி வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்

By

Published : Feb 3, 2023, 3:55 PM IST

அரியலூர்: எளிமையான முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்யும் யோசனைகள் குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, ’பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்வதைத் தவிர்க்கும் வண்ணம், பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எங்கிருந்தும் எந்நேரமும் உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்தி பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும், உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணத்தை இணையம் வாயிலாக செலுத்தவும் மற்றும் பட்டா மாறுதலின் நடவடிக்கையின் ஒவ்வொரு நிலையையும், மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கும் வசதிகளையும் கொண்ட இணையத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (நிலஅளவை மற்றும் நிலவரித்திட்டத்துறை) அறிமுகம் செய்துள்ளது.

இவ்விணையதளத்தில் உள்ள வசதிகள் பின்வருமாறு, இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க https://tamilnilam.tn.gov.in/citizen/, பட்டா மாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://eservices.tn.gov.in/eservicesnew/log/Appstatus.html/, பட்டாமாறுதல் உத்தரவின் நகல், பட்டா, சிட்டா (புலப்படம்), அ-பதிவேடு ஆகியவற்றை எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவையின் கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ள https://eservices.tn.gov.in/ இவ்விணையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Anna death anniversary: "இப்படை தோற்கின் எப்படை வெல்லும்" - வீரநடை போட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details