அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சுரேஷ். இவர் சுத்தமல்லி பகுதியில் நேற்று (ஏப்.14) மாலை அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி உள்ளார்.
மதுவினை சிறிதளவு குடித்துவிட்டு மது பாட்டிலில் பாம்பு குட்டி இருப்பதைக் கண்டு சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையில், மயக்கமடைந்த அவரை தகவலறிந்து வந்த குடும்பத்தினர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.