அரியலூர்:செந்துறை வட்டம் நிண்ணியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள். இவர் அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எனது கணவர் தங்கவேல் காலமாகி விட்டதால், சொத்துக்களுக்கான பட்டாவை எனது பெயருக்கு மாற்றம் செய்து தர வேண்டும் என்று கடந்த 12.01.2012 அன்று செந்துறை தாசில்தாரிடம் விண்ணப்பம் செய்தேன்.
இதற்கான சேவை கட்டணமாக 50 ரூபாய் செலுத்தினேன். ஆனால் எனது பட்டா மாறுதல் கோரும் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டது. அதேபோல் 2017 வரை பலமுறை விண்ணப்பம் செய்தபோதும், எனது மனுக்கள் ஏற்கப்படவில்லை. சேவை கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு சேவை புரியாமல் இருந்ததால், சம்பந்தப்பட்ட தாசில்தார் எனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மேலும் எனது பெயருக்கு பட்டாவை மாற்றித் தர வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவ்வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராம்ராஜ் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தாசில்தார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‘தங்கவேல் பெயரிலான சொத்துக்கள் யாவும் அவரது பூர்வீக சொத்துக்கள். அந்த சொத்துக்கு மொத்தம் 11 பேர் வாரிசுதாரர்கள். ஆனால் தங்கவேலுவின் மனைவி, தன் பெயரில் தங்கவேல் உயிர் எழுதி வைத்துள்ளதால், எனது பெயரில் பட்டா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவ்வாறு வழங்க இயலாது.
எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது” என தெரிவித்தனர். இதனையடுத்து ஆஜரான பழனியம்மாள் தரப்பினர், ‘விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்ட காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பத்தின் மீது rejected என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்தால்தான், அவற்றை சரி செய்து கொள்ள இயலும்.